ஆடியோ

எந்த ஒரு அனுபவமும் இல்லாவிட்டாலும், நோவா
கீழ்ப்படிதலுடன் பேழையை கட்டி இரட்சிக்கப்பட்டார்.
தேவனுடைய வாக்குத்தத்ததை விசுவாசித்து,
ஆபிரகாம் தயங்காமல் ஈசாக்கை தேவனுக்கு பலியாக
கொடுத்தார், பெரிய தடையாக இருந்த பார்வோனிடம்
மோசே தேவனுடைய வார்த்தையை தைரியமாக வழங்கி,
தேவனுடைய கம்பீர வல்லமையை பிரகாசித்து,
ஒரு மாபெரும் தீர்க்கதரிசியானார்!
நமது விசுவாசத்தின் முற்பிதாக்கள் செய்ததுபோலவே,
நாமும் தேவனுடைய வார்த்தைகளுக்கு சம்பூரணமாய்
கீழ்ப்படிந்து, அவர் வார்த்தையின்படியே செய்தால்,
700 கோடி ஜனங்களுக்கும் பிரசங்கிக்க வேண்டும்
என்ற கட்டளையும்கூட தேவனுடைய வல்லமையினாலே
நிறைவேறிவிடும்.