தேவனுடைய நியாயப்பிரமாணத்தை கைக்கொள்கிறவர்களே
தேவனை அறிந்தவர்கள் என்று வேதாகமம் சொல்கிறது.
“அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.” 1 யோவான் 2:3–4
பஸ்கா என்பது தேவனாலே ஸ்தாபிக்கப்பட்டு
தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட புதிய உடன்படிக்கையின்
மையக்கருவாகும். தேவன் நித்திய ஜீவனுக்கான வழியை மற்றும்
பாவமன்னிப்பிற்கான இரகசியத்தை பஸ்காவில் வைத்துள்ளார்.
அழிவுகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறார். மேலும்
மற்ற தேவர்களையும் தமது வல்லமையினால் நியாந்தீர்க்கிறார்.
மிகவும் முக்கியம் வாய்ந்ததும், மாபெரும் ஆசீர்வாதங்கள் கொண்டுள்ள
இந்த புதிய உடன்படிக்கையின் பண்டிகையை நாம் ஆசரிக்காதபடிக்கு
சாத்தான் பஸ்காவை கி.பி. 325-ல் நிக்கேயா ஆலோசனை
சங்கத்தின்மூலம் அழித்தான்.
இரண்டாம் வருகை இயேசு கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களால்
மீட்டெடுக்கப்பட்ட தேவனுடைய கட்டளையான பஸ்காவை
தேவனுடைய ஜனங்கள் கண்டிப்பாக ஆசரிக்க வேண்டும்.
தேவன்தாமே ஏற்படுத்தின பஸ்காவின்மீது
ஆரம்ப கால சபை பரிசுத்தவான்கள் தைரியம் கொண்டிருந்தார்கள்.
வாழ்க்கையில் ஆபத்துக்கள் வந்தாலும்கூட ஜீவனின் சத்தியத்தை
கைவிடவில்லை.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை