தாயாகிய தேவனை விசுவாசிப்பது கடினமாக இருக்கிறதா?
தேவன் சிருஷ்டித்த அனைத்தையும் கொண்டு
புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.
தாயாகிய தேவனை ஏற்றுக் கொள்வதில்
யாருக்காவது கடினமாக இருந்தால்,
சுற்றியுள்ள சிருஷ்டிப்புகளை பார்த்து,
தாயாகிய தேவனை புரிந்துகொள்ளத் தொடங்குங்கள்
என்று அவர்களிடம் சொல்வேன்.
இப்பூமியில் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்துமே
தேவனுடைய சித்தத்தினால் சிருஷ்டிக்கப்பட்டது.
அந்த சிருஷ்டிப்பே, தேவன் யார் என்று நமக்கு
தெரியப்படுத்தும் ஆசிரியராக இருக்கிறது.
மேலும் சிருஷ்டிப்பில் தேவன் நமக்குக் காண்பித்த
ஒரு விஷயம் என்னவென்றால், பிள்ளைகளுக்கு
ஜீவனை கொடுக்கும்படி தேவன் தாய்மார்களைப் படைத்தார்.
தாயிடமிருந்து ஜீவனை பெறுவதென்பது
தேவனால் வடிவமைக்கப்பட்ட
இயற்கையின் நியதியாகும்.
ஏனென்றால், தந்தையாகிய தேவன் மட்டுமல்லாமல்
நித்திய ஜிவனை வழங்கக்கூடிய தாயாகிய தேவனும்
இருக்கிறார் என்று தேவன் காண்பிக்க விரும்புகிறார்.
இவ்வாறாக சிருஷ்டிக்கப்பட்ட தேவனுக்கும்
பெண் சாயல் இருக்கிறது என்பதற்கு
இதுவே உறுதியான ஆதாரமாகும்.
மேலும் அவர்தான் நம்முடைய பரலோக தாயாவார்.
நாம் எப்போதும் தந்தையாகிய தேவன்
ஒருவர் மட்டுமே என்று விசுவாசித்து
வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
நாம் எப்போதும் அதை ஒரு உண்மையாகவே
எடுத்துக் கொண்டதினால் ஒருபோதும்
கேள்வி எழுப்பினதில்லை,
ஆனால் சிருஷ்டிப்பை பார்க்கும்போது,
தந்தையும் தாயும் இருக்கின்றனர்.
நமக்கு பரலோகத் தாய் இருப்பதைக் காண்பிக்கவே
தேவன் இவ்வாறாக சிருஷ்டித்தார்.
மனிதர்களாகிய நமக்கு அனைத்துமே தெரியாது
என்பதற்காகவே தேவன் நமக்கு வேதாகமத்தை
வழங்கினார் என்பதையும் நினைவில்
கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
எது உண்மை என்றும் எது பொய் என்றும்
தேவனுடைய வார்த்தையால் நாம் அறியும்படி
தேவன் விரும்புகிறார்.
தாயாகிய தேவனை பற்றி வேதாகமம்
சாட்சியளிப்பதால் நாம் அதை சத்தியமாக
கருதிட வேண்டும்.
நாம் தேவனுடைய வார்த்தையை
மிக முக்கியமானதாக கருதினால்,
பரலோகத் தாய் இருக்கிறார் என்பதையும்,
நமக்கு நித்திய ஜீவனை கொடுக்கவே
அவர் இருக்கிறார் என்பதையும்
சுலபமாக புரிந்துகொண்டு விசுவாசித்திட முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை