நரகம் என்பது மிகவும் பயங்கரமான இடமாகும், அங்கு அக்கினிஜுவாலையில் வேதனைபடும்போது ஒரு துளி தண்ணீரைப் பெறுவது கூட கடினமாகும். (லூக்கா 16:24) நம் கை, கால் அல்லது கண் நம்மைப் பாவம் செய்யச் செய்தால், நரகத்திற்குச் செல்வதை விட அதை வெட்டுவது அல்லது பிடுங்குவது நல்லது என்று இயேசு சொன்னார். (மாற்கு 9:43) ஏனென்றால், நரகத்தில் ஏற்படும் வேதனையை நம் உடலின் ஒரு பாகத்தை துண்டிக்கும் வலியுடன் ஒப்பிட முடியாது.
"அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்" மாற்கு 9:48
"எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்" மாற்கு 9:49
நரகத்தின் தண்டனை மிகவும் வேதனையாக இருந்தாலும், நம்மால் சாக முடியாது. நரகத்தில், சந்தோஷமான நேரமோ, ஓய்வெடுக்கும் நேரமோ, இரட்சிப்பின் நம்பிக்கையோ இல்லை. ஆனால் மிகப்பெரிய வலியும் வருத்தமும் துக்கமும் மட்டுமே இருக்கும். நற்செய்தியைக் கேட்டு மனம் வருந்தாவிட்டால் நரகத்திற்குச் செல்வதைத் தவிர நமக்கு ஏன் வேறு வழியில்லை?
நாம் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பே பரலோகத்தில் தேவதூதர்களாக இருந்தோம். (யோபு 38:4-21) இருப்பினும், நாம் பரலோகத்தில் பாவங்களைச் செய்து நரகத்திற்கு செல்லும் தண்டனையை பெற்றுக்கொண்டோம். எனவே ஆவிக்குரிய சிறைச்சாலையான இந்த பூமியில் நாம் பிறந்து தற்காலிகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். (எசேக்கியேல் 28:13) இந்த பூமியில் நாம் நரக தண்டனையை தவிர்க்கும் வழியை தேடாவிட்டால், நரகத்திற்கு செல்ல விதிக்கப்படுவோம்.
நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? ரோமர் 7:24
நரக தண்டனையை பெற விதிக்கப்பட்டிருந்த மனிதகுலத்தின்மீது தேவன் இரக்கம் வைத்து நரக தண்டனையை தவிர்ப்பதற்கான வழியை காண்பிக்க அவர்தாமே பூமிக்கு வந்தார்.
"பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு . . . அழைக்கவந்தேன்" லூக்கா 5:32
மரணம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் நமது பாவங்களை மன்னிப்பதற்காகவும் மேலும் நரக தண்டனையிலிருந்து நம்மை இரட்சிப்பதற்காகவும் பாவிகளான மனிதகுலத்திற்காக தேவன் தமது மாம்சத்தையும் இரத்தத்தையும் மீட்கும்பொருளாக கொடுத்தார்.
“நீங்கள் வாங்கிப் புசியுங்கள், பஸ்காவின் அப்பம் என் சரீரம்” மத்தேயு 26:26
“இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” மத்தேயு 26:28
நாம் புதிய உடன்படிக்கை பஸ்காவை ஆசரிக்கும்போது, பாவ மன்னிப்பு பெற்று நரகத்தின் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவோம். மேலும், நாம் நித்திய ஜீவனைப் பெற்று பரலோகத்திற்கு திரும்ப முடியும்.
“என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்” யோவான் 6:54
"பஸ்காவின் மூலம் பாவ மன்னிப்பு மற்றும் நித்திய ஜீவன் பெறுங்கள்,” என்ற இந்த செய்தியை நாம் நிராகரித்தால், பரலோகத்தில் நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்படாது, மேலும் நமக்கு விதிக்கப்பட்டபடியே நரக தண்டனையைப் பெற வேண்டும்.
"அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” லூக்கா 22:15
தயவுசெய்து புதிய உடன்படிக்கை பஸ்காவை ஆசரித்து, பாவ மன்னிப்புக்கான தேவனுடைய முத்திரையைப் பெற்று பரலோகத்திற்கு திரும்புங்கள்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை