தேவனுடைய வார்த்தையின்படி உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் இரட்சிப்பின் செய்தியைப் பிரசங்கிக்க, நம்முடைய சொந்த வழிமுறைகளை நம்பாமல், யோசுவாவைப் போலவே தேவனை மையமாகக் கொண்டு, விசுவாசத்துடன் சுவிசேஷப் பணியை மேற்கொள்ள வேண்டும். நாமும் பாதியில் கைவிடாத விசுவாசத்துடன் இறுதிவரை முன்னோக்கி ஓட வேண்டும்.
சாலமோனிடம் செல்வம், புகழ் என அனைத்தும் இருந்தது. இருந்தாலும், இறுதியில் எல்லாம் மாயை என்று அவர் ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்டபடி, உலக ஆசைகளை விட தேவனை பொக்கிஷமாகக் கருதுபவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரிசுத்த ஆவியின் காலத்தில், கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களையும் தாயாகிய தேவனையும் பொக்கிஷமாகக் கருதுபவர்கள் மிகுதியாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்;
எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
பிரசங்கி 12:13
“நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும்” என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார். . . .சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?
ஏசாயா 14:24-27
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை