நாம் பரலோக ராஜ்யம் பிரவேசிக்கும் வரைக்கும்
நிறைய புடமிடப்படுதலும் பரீட்சைகளும் இருக்கும் என்று
வேதாகமம் சொல்கிறது.
சில ஜனங்கள் பொருளாதர சோதனைகளிலும்,
மற்றவர்கள் தங்களை சுற்றியிருக்கும் உறவின்முறைகள்
மூலமாகவும் சோதிக்கப்படுகிறார்கள். மேலும் சிலர்
குறைவான அறிவின் நிமித்தம் சோதிக்கப்படுகிறார்கள்.
வேதாகமம் இந்த புடமிடப்படுதலை ஜெயங்கொள்கிறவர்கள்
தங்கத்தைவிட மிகவும் விலையேறப்பெற்றவர்களாக இருந்து
பரலோகத்தில் தேவனிடமிருந்து துதியையும் மகிமையையும்
கனத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 1 பேதுரு 1:7
“உன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றி வா” என்று
2000 வருடங்களுக்கு முன்னே இயேசு சொன்னதுபோலவே,
ஆரம்ப கால சபை தங்களது சிலுவைகளை எடுத்துக்கொண்டு
விசுவாசத்தில் புடமிடப்பட்டு, எப்பொழுதும் சந்தோஷமாயிருந்து
எல்லா சூழ்நிலைகளிலும் நன்றிகளை செலுத்தினார்கள்.
ஏனென்றால் இப்பூமியின்மீது நாம் படுகிற பாடுகளை பரலோகத்தில்
நாம் பெறப்போகிற மகிமையோடு ஒப்பிடவே முடியாது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை