N 		
			
இயேசுவின் வாழ்க்கையும் சுற்றுப்புறமும்
		  
		  
          	இந்த பூமிக்கு வந்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய இயேசு மற்றும் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களின் வாழ்க்கையும் சுற்றுபுறமும்.
வல்லமையுள்ள தேவன், நித்திய பிதாவானவர், இந்த பூமிக்கு வந்து, சிலுவையில் அறையப்பட்டு எண்ணற்ற ஜனங்களால் நிந்திக்கப்பட்டு, அசட்டைப்பண்ணப்பட்டு துன்புறத்தப்பட்டார். ஆனாலும், அவர் தம்முடைய மெய்யான ஜனங்களை கண்டுபிடித்து, அவர்களுடைய அனைத்து பாவங்களையும் நிவிர்த்தி செய்து, அவர்களை இரட்சிக்கும்படியாக அனைத்தையும் மெளனமாக சகித்துக்கொண்டார்.
பரிசுத்த ஆவியின் காலத்தில், பரலோகத் எருசலேம் தாயின் துக்க நாட்கள் வருமென்றும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது.
பரலோகப் பிள்ளைகளை இரட்சிக்கும் செயல்பாட்டிலே, அவருடைய முதல் வருகையில் இயேசுவும், இரண்டாம் வருகையில் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோகத் எருசலேம் தாய் என இருவரும் மாம்சத்தில் இந்த பூமிக்கு வந்தார்கள். தீர்க்கதரிசனத்தின்படி, இந்தப் பாதையில் துக்க நாட்களும், அதைத் தொடர்ந்து மகிமை பெறப்படும் மகிழ்ச்சியின் நாட்களும் இருக்கின்றது. இந்த வாக்குத்தத்தத்தின்படியே, இப்போது தேவனுடைய சபையை வழிநடத்தும் தாயாகிய தேவனின் மகிமையானது உலகம் முழுவதும் வெளிப்படுத்தப்படுகிறது.
இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
யோவான் 10:32–33
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60:20
          
          பார்த்த எண்ணிக்கை101
          
           
          
			
				#மாம்சத்தில் இருக்கும் தேவன்			
			
				#விசுவாசம்