காலநிலை அதிகம் மாறாத வெப்பமண்டலப் பகுதிகளில், மரங்களில் பெரும்பாலும் தெளிவற்ற வளர்ச்சி வளையங்களே காணப்படும். ஆனால், வானிலை மாற்றங்கள், பூச்சிகள், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற துன்பங்களை அனுபவித்த மரங்களில் தெளிவான வளர்ச்சி வளையங்கள் காணப்படும். அவ்வாறே, ஒவ்வொருவரும் பரலோக ராஜ்யத்திற்காக எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதைத் தீர்மானிக்கும் வளர்ச்சி வளையங்களைக் கொண்டுள்ளனர். ஆகவே, ஒரு ஆத்துமாவை இரட்சிக்க வேண்டும் என்ற ஊக்கமான இருதயத்தோடு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவது முக்கியமானதாகும்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் வீட்டிலோ அல்லது சபையிலோ, தங்கள் பரலோக வளர்ச்சி வளையங்களை உருவாக்குகிறார்கள். நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போதும், ஆராதனையில் கலந்துகொள்ளும்போதும், ஜெபிக்கும்போதும் கொண்டிருக்கும் மனநிலையே நமது பரலோக வளர்ச்சி வளையங்களைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அதற்கேற்ப ஆசீர்வாதங்களும் பலன்களும் வழங்கப்படும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 22:12
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். கலாத்தியர் 6:8-9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை