ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள் சகலவிதமான பாடுகளும், கஷ்டங்களும், துன்பங்களும் இருந்தபோதிலும், இறுதிவரை கைவிடாமல் தேவனைப் பின்பற்றக்கூடிய விசுவாசப் பாதையில் நடந்தனர். சிலுவையில் கிறிஸ்து சிந்திய தியாக இரத்தம் நம்முடைய பாவங்களுக்காகவே என்றும், அவருடைய மிகுந்த அன்பினால்தான் அவர் நம்மை இரட்சித்தார் என்றும் அவர்கள் உணர்ந்திருந்ததால்தான், அவர்களால் அப்படி செய்ய முடிந்தது.
அழகியும் மிருகமும் என்ற கதையிலிருக்கும் மிருகம் உண்மையான அன்பை உணர்ந்துகொண்டபின் மீண்டும் இளவரசனாக மாறியதுபோலவே,
நாமும் தந்தை அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் மாபெரும் அன்பை உணர்ந்துகொள்ளும்போது, ஆராதனை ஆசரிப்பதற்கும் தேவனிடத்தில் ஜெபம்பண்ணுவதற்கும் பரலோக ஜனங்களாக மறுரூபமாக்கப்படுவதைக் குறித்தும்
நாம் உற்சாகமாக உணர முடியும்.
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”
யோவான் 13:34-35
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை