[பகுதி 1]
இருப்பினும், கல்லூரியின் காலகட்டத்திலே,
எனது மத நம்பிக்கைகள் உண்மையாக இருக்கிறதா
அல்லது வெறும் பாரம்பரிய வழக்கங்களா
என்று கேள்வி கேட்கத் தொடங்கினேன்.
பதில்களைத் தேடிக்கொண்டிருந்தபோது,
தேவனுடைய சபையின் உறுப்பினர்களிடமிருந்து
வேதாகம கல்விக்காக அழைப்பை பெற்றேன்.
அவர்கள் வேதாகமத்திலிருப்பதை எனக்குக்
காண்பித்தபோது நான் மிகவும்
ஆச்சரியமடைந்தேன்.
ஆகவே, தேவனுடைய சபையின்
போதனையானது தெளிவாக இருந்ததை
என்னால் பார்க்க முடிந்தது.
மேலும், இதுதான் மெய்யான சத்தியமாகும்.
[பகுதி 2]
தேவனுடைய சபையில் நான் கற்றுக்கொண்ட
எல்லா விஷயங்களைப் பார்க்கிலும்
தாயாகிய தேவனை பற்றி அறிந்து கொண்டதே
மேலும் குறிப்பாக வெளிப்படுத்தின விசேஷத்திலே
புது எருசலேம் பற்றி 1ஆம் அதிகாரத்திலிருந்து
22ஆம் அதிகாரம் வரை, அவர்கள் எந்த விதமான
ஆழமும் அல்லது உறுதியான விளக்கமும் இல்லாமல்
வெறுமனே கடந்து செல்வதினால் அது மிகவும்
முக்கியமான தீர்க்கதரிசனமாகத் தோன்றியது.
எனவே, தேவனுடைய சபையில்
வெளிப்படுத்தின விசேஷத்தின் வாயிலாக
புது எருசலேம்தான் நம்முடைய பரலோகத் தாய் என்று
வேதாகமத்தின் மூலம் காண்பித்தபோது,
நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்.
நாங்கள் இதுவரை தந்தையாகிய தேவனை
மட்டுமே விசுவாசித்தோம், ஆனால் தாயாகிய
தேவனை வேதாகமம் சாட்சியளித்ததே
கண் திறக்கும் தருணமாக இருந்தது.
ஆட்டுகுட்டியின் மனைவியாகிய மணவாட்டியான
புதிய எருசலேம்தான் நம்முடைய பரலோக தாய்
என்றும் மேலும் அவர் அதியாகம புத்தகத்தின்
துவக்கத்திலிருந்தே, தேவன் “நமது
சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும்
மனுஷனை உண்டாக்குவோமாக” என்று சொல்லி
சாட்சியளிக்கப்பட்டதையும் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
வேதாகமத்திலே,
முதல் புத்தகமான ஆதியாகமத்திலிருந்து
கடைசி புத்தகமான வெளிப்படுத்தல் வரை
பரலோக தாயை பற்றி சாட்சியளிக்கிறது.
மேலும் வேதாகமத்தின் தொடக்கத்திலிருந்தே
தாயாகிய தேவனைப் பற்றின சாட்சி உள்ளது
என்பதை நான் புரிந்து கொண்டேன்.
வேதாகமம் முழுவதிலும்
சாட்சியங்கள் நிறைந்துள்ளது.
[பகுதி3]
நான் வேதாகமத்தைப் படித்தபோது,
தாயாகிய தேவனை விசுவாசிப்பது எனக்கு
சுலபமாகவே இருந்தது,
ஆனாலும், தாயாகிய தேவன் மாம்சத்தில்
வந்திருக்கிறார் என்று விசுவாசிப்பது
சற்று கடினமாகவே இருந்தது.
2000 வருடங்களுக்கு முன்பு,
இயேசுவுக்கு சம்பவித்ததை திரும்பி
பார்ப்பதின் மூலம் இறுதியாக
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த உதாரணத்தின் மூலமாக,
மாம்சத்தில் வந்த தேவனை ஏற்றுக்கொள்வதற்கு,
நான் வரையறுக்கப்பட்ட எனது சுய யோசனைகள்,
எண்ணங்கள் அல்லது அனுமானத்தின் வாயிலாக
தாயாகிய தேவனை பார்க்க கூடாது
என்று உணர்ந்து கொண்டேன்.
நான் வேதாகம தீர்க்கதரிசனத்தின்படி
மட்டுமே தாயை பார்க்க விரும்புகிறேன்.
[பகுதி4]
தாயாகிய தேவனை ஏற்றுக் கொள்வதில்
யாருக்காவது கடினமாக இருந்தால்,
சுற்றியுள்ள சிருஷ்டிப்புகளை பார்த்து,
தாயாகிய தேவனை புரிந்துகொள்ளத் தொடங்குங்கள்
என்று அவர்களிடம் சொல்வேன்.
தாயிடமிருந்து ஜீவனை பெறுவதென்பது
தேவனால் வடிவமைக்கப்பட்ட
இயற்கையின் நியதியாகும்
ஏனென்றால், தந்தையாகிய தேவன் மட்டுமல்லாமல்
நித்திய ஜிவனை வழங்கக்கூடிய தாயாகிய தேவனும்
இருக்கிறார் என்று தேவன் காண்பிக்க விரும்புகிறார்.
[பகுதி5]
நான் தேவனுடைய சபைக்கு வருவதற்கு முன்பு,
எனது வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுப்பதற்கும்
இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நன்றாக
வாழ முடியுமா என்று எப்போதும் கவலைப்பட்டேன்.
இருப்பினும், சத்தியத்தை பெற்றுக்கொண்டு,
தேவனுடைய கட்டளைகளை அறிந்த பிறகு,
இறுதியாக நான் தேவனுக்கு கீழ்ப்படிந்து,
தேவனுடைய பிள்ளையாக ஓர் தகுதியான
வாழ்க்கையை வாழ முடியும் என்ற
உறுதியான நம்பிக்கையை பெற்றுக்கொண்டேன்.
தேவனுடைய சபைக்கு வருவதைப் பற்றி
யாராவது யோசித்துக்கொண்டிருந்தால்,
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
வேதாகமத்தை படிக்க வருமாறு
நான் கேட்டுக்கொள்கிறேன்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை