மத்தேயு 25ஆம் அதிகரத்தில் தாலந்துகளின்
உவமையில் தாலந்துகளை பெற்று கொண்டு
வியாபாரம் செய்யும்படி எஜமான் சொன்னது போலவே,
நாம் தேவனிடமிருந்து பெற்ற புதிய உடன்படிக்கையின்
சுவிசேஷத்தை உலகம் முழுவதும் விடாமுயற்சியுடன்
பிரசங்கித்திட வேண்டும்.
ஒரு தாலந்தை பெற்றுக்கொண்டவர் அதை நிலத்தில்
புதைத்து வைத்ததுப் போலல்லாமல்,
எல்லா சந்தேகங்களையும் தயக்கங்களையும்
தூக்கியெறிந்துவிட்டு, விசுவாச கண்களோடு
சுவிசேஷத்தை பிரசங்கித்தால், நாம் தேவனுடைய
அற்புதங்களை அனுபவம் செய்ய முடியும்.
பரிசுத்த ஆவியின் வல்லமையை கொண்டு
இயேசுவே கிறிஸ்து என்று அப்போஸ்தலர்கள்
ஒவ்வொரு நாளும் பிரசங்கித்ததுபோலவே,
இந்த பரிசுத்த ஆவியின் காலத்தில்
அவருடைய முதல் வருகையைவிட
ஏழுமடங்கு வல்லமை வாய்ந்தது.
பரிசுத்த ஆவியை கொடுப்பேன்
என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்து,
உலகெங்கிலும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவனின் இரட்சிப்பை வாஞ்சையோடு
பிரசங்கிக்க வேண்டும்.
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி,
ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று
இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின்
வரத்தைப் பெறுவீர்கள்.
மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி
உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய்
ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர்
சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 2:38-41
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை