10 கட்டளைகளுடன் இரண்டாம் தரம்
மோசே இறங்கி வந்த நாளையே
தேவன் பாவநிவிர்த்தி செய்யும் நாளாக
நியமித்தார், மேலும் கூடாரப் பண்டிகை
என்பது பத்து கட்டளைகள் அடங்கிய
கற்பலகைகளை வைப்பதற்காக
இஸ்ரவேலர்கள் கூடாரத்தைக் கட்டிய
பண்டிகையாகும்.
3,500 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததுபோலவே,
தேவனுடைய ஆலயத்தை கட்டுவதற்கான
மிக முக்கியமான அம்சம், இருதயம் எழுப்பப்பட்டு,
பங்குகொள்ள மனபூர்வமான இருதயமும்
கொண்டிருப்பதே ஆகும்.
அப்படிப்பட்ட ஜனங்கள் ஆலயம்
கட்டுவதற்காக ஏராளமான பொருட்களை
காணிக்கையாக செலுத்தினார்கள்.
இன்று, முழு உலகமும் கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் பரலோகத் தாய் எருசலேமை நோக்கி
திரண்டு வருகிறார்கள், ஏனென்றால் தேவனுடைய
ஜனங்கள் எருசலேம் ஆலயத்தின் பல்வேறு
பொருட்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
பழைய ஏற்பாட்டில் கூடாரப் பண்டிகையின்போது
பல்வேறு கிளைகள் சேகரிக்கப்பட்டது போலவே,
தேவனுடைய ஜனங்கள் பல்வேறு வகையான
விருட்சங்களாக எருசலேமில் ஒன்றுகூடுவார்கள்
என்று தீர்க்கதரிசனம் இருக்கின்றது.
பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி,
எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ,
அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின்
வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும்,
பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக்
கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும். . . . வந்தார்கள்;
யாத்திராகமம் 35:21-22
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள்
என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல்
கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு
இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய்
இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த
ஆலயமாக எழும்புகிறது;
அவர்மேல் நீங்களும் ஆவியினாலே
தேவனுடைய வாசஸ்தலமாகக்
கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்.
எபேசியர் 2:20-22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை