கிறிஸ்து அன்சாங்ஹோங் தேவனாவார், ஏனென்றால் கிறிஸ்து அன்சாங்ஹோங் மட்டும் தான் முத்திரித்திருந்த வேதாகமத்தைத் திறந்து, நித்திய உடன்படிக்கையை மீட்டெடுத்து கடைசி நாட்களில் தாவீதின் வேருமானவராக வந்தார். தமது முதல் வருகையில் இயேசு என்ற நாமத்திலும் தமது இரண்டாம் வருகையில் அன்சாங்ஹோங் என்ற நாமத்திலும் கிறிஸ்து வந்தபோது, 30 வயதில் ஞானஸ்நானம் பெற்று, ஆவிக்குரிய அபிஷேகம் பெற்றார். தமது முதல் வருகையில் 3 வருடங்களும், இரண்டாம் வருகையில் 37 வருடங்களும் சுவிசேஷ ராஜ்யத்தை ராஜ்யபாரம்பண்ணி, தாவீது ராஜாவின் சிங்காசனத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.
இயேசு கற்பித்தது போல, 1948ல் அத்திமர உவமையின்படி இஸ்ரவேல் சுதந்திரம் அடைந்தபோது, கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள் வாசலருகே நின்று புதிய உடன்படிக்கை மூலமாக இரட்சிப்பை நமக்கு அருளி, தேவனுடைய சபையை ஸ்தாபித்து தாயாகிய தேவனைக் குறித்து சாட்சியளித்தார்.
ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 5:4-5
இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான்.
ஓசியா 3:5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை