தம்மை விசுவாசிப்பவர்களுக்கு தேவன் ஆராதனை நாளை நியமித்திருக்கிறார்.
"ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக." யாத் 20:8
ஓய்வுநாள் தேவனுக்கும் தம்முடைய ஜனங்களுக்கும் ஓர் அடையாளமாகும். இது தேவன் தம்முடைய ஜனங்களை பரிசுத்தம் பண்ணுகிற நாளாகும். (எசே 20:12). எனவே, தேவன் நியமித்த ஆராதனை நாளான ஓய்வுநாளை தேவனுடைய ஜனங்கள் கைக்கொள்ள வேண்டும்.
ஓய்வுநாள் என்பது தேவன் வானத்தையும் பூமியையும் ஆறு நாளில் சிருஷ்டித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்த நாளாகும். (ஆதி 2:3) ஏழாம் நாளான ஓய்வுநாள் என்பது தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையை நினைவுகூறும் நாளாகும்.
அப்படியென்றால், வாரத்தின் எந்த கிழமை ஏழாம் நாள்?
அகராதிகளில் ஏழாம் நாள் சனிக்கிழமை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் நாட்காட்டியைப் பார்த்தால், ஏழாம் நாளான ஓய்வுநாள் சனிக்கிழமையாகும். வாரத்தின் முதல் நாளில் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று வேதாகமம் சொல்கிறது. (மாற்கு 16:9) அதே வசனத்தை, குட் நியூஸ் வேதாகமத்தில் இயேசு ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. (மாற்கு 16:9)
அப்படியானால், வாரத்தின் எந்த கிழமை ஓய்வுநாள்? ஓய்வுநாள் சனிக்கிழமையாகும். கத்தோலிக்க புத்தகங்களும் ஓய்வுநாள் சனிக்கிழமை என்று சாட்சியளிக்கின்றன.
"நாம் ஒருபோதும் பரிசுத்தம் செய்திராத சனிக்கிழமை மத ஆசரிப்பைதான் வேதவாக்கியங்கள் வலியுறுத்துகின்றன”
இயேசுவும் கூட ஓய்வுநாளில்[சனிக்கிழமை] ஆராதனை செய்தார்.
“இயேசு. . .தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில்[சனிக்கிழமை] ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.” லூக் 4:16
இயேசு பரமேறிய பின், அப்போஸ்தலர் பவுலும் கூட ஓய்வுநாளில்[சனிக்கிழமை] ஆராதனை செய்தார்.
“பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,” அப் 17:2
இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஓய்வுநாளை[சனிக்கிழமை] ஆசரித்ததுப் போல, தேவனுடைய ஜனங்கள் தேவன் நியமித்த ஓய்வுநாளை [சனிக்கிழமை] ஆசரிக்க வேண்டும். தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் தேவனால் நியமிக்கப்பட்ட ஏழாம் நாளான ஓய்வுநாளை ஆசரிக்கிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை