ஒவ்வொரு ஆராதனையின் வாயிலாகவும்,
தேவன் தன் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதங்களை
வழங்குவதினால், தேவனை விசுவாசித்து
அவரைப் பணிந்துகொள்ளும் செயல்பாடே
சந்தோஷமும் மகிழ்ச்சியுமாகும்.
பரலோக நம்பிக்கையில்லாமல், கட்டாயமான
விசுவாச வாழ்க்கை என்பது சோதனையைக்
கொண்டு வருகிறது. நாம் சாத்தானின்
தந்திரத்தால் தோற்கடிக்கப்பட்ட ஆதாம் ஏவாளின்
பாதையைப் பின்பற்றாமல், யோபுவைப்
போல பூரண விசுவாசம்கொண்டு, இறுதிவரை
தேவனுக்குப் பயந்து, இயேசுவின்
உதரணத்தைப் பின்பற்றி, தேவனுடைய
வார்த்தையின் வாயிலாக சோதனையை
ஜெயங்கொள்ள வேண்டும்.
நம் பரலோகப் பாதையில் இடையூறு செய்யும்
அனைத்தும் உலப்பிரகாரமான சோதனைகளாகும்.
40 வருடங்களாக வனந்தரத்தில், ஒவ்வொரு
தருணத்திலும் இஸ்ரவேலர்கள்
சோதிக்கப்பட்டதுபோலவே,
பரலோகக் கானானை நோக்கிச் செல்லும் தேவனுடைய சபையின்
உறுப்பினர்களும் சோதிக்கப்படுகிறார்கள்,
ஆனால் நாம் தந்தையாகிய தேவன் மற்றும்
தாயாகிய தேவன்மீது பூரண விசுவாசம்
கொண்டிருந்தால், பரீட்சையில் நிலைநின்று,
இறுதியில் பரலோக ஆசீர்வாதங்களை
நம்மால் பெற முடியும்.
”என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால்,
பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும்
வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.”
வெளிப்படுத்தின விசேஷம் 3:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை