சிவந்த சமுத்திரத்தை பிளந்தது, எரிகோ பட்டணத்தை விழப் பண்ணியது, சூரியனை நிறுத்தியது போன்ற பிதாவின் காலம் மற்றும் குமாரனின் காலத்தின் அற்புதங்களை நாம் உற்றுப் பார்க்கும்போது, அனைத்துமே தேவனுடைய வார்த்தையின்படி நடக்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அன்சாங்ஹோங் தேவனும் தாயாகிய தேவனும் இப்பூமிக்கு பரிசுத்த ஆவியின் காலத்தில் ஆவியும் மணவாட்டியுமாக வந்தார்கள். சுவிசேஷப் பணியானது தேவனால் நிறைவேற்றப்படுகிறது என்பதை விசுவாசித்து, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போதெல்லாம், இத்தருணத்திலும்கூட, அற்புதமான சுவிசேஷப் பணி நிகழ்த்தப்படுகிறது.
(சீயோனின் நறுமணம்: பெந்தெகொஸ்தேவின் பிரசங்க விழாவிற்குப் பின்பு, 4 மாதங்களில் நிறைவேற்றப்பட்ட சுவிசேஷப் பணி)
கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, … சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; …
[யோசுவா 10:12-13]
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
[யாத்திராகமம் 14:21]
அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
… ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
[லூக்கா 5:4-6]
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை