சில ஜனங்கள் வேதாகமத்தை இஸ்ரேலின் வரலாற்றுப் புத்தகமாக அல்லது புராணங்களின் புத்தகமாக மட்டுமே கருதுகின்றனர்.
இருப்பினும், வேதாகமம் உலகின் மிகப் பழமையான புத்தகமாகும், இது சுமார் 1,600 வருடங்களாக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வேலைகளை செய்த பல்வேறு ஜனங்களால் எழுதப்பட்டது.
மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 1,600 வருடங்களில் எழுதப்பட்ட அனைத்தும் தீர்க்கதரிசனம் மற்றும் நிறைவேற்றுதலின் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வேதாகம பதிவுகளில், கோரேசு ராஜாவை பற்றிய தீர்க்கதரிசனமும் அதன் நிறைவேற்றுதலையும் படிப்போம்.
கோரேசு ராஜா என்பவர் பெர்சியா ராஜ்யத்தை ஸ்தாபித்தவராகவும் கிழக்கு நாடுகளை வென்றவராகவும் இருந்தார்.
வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது மாபெரும் சாதனையைப் பார்ப்போம்.
“கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.” எஸ் 1:2–3
பெர்சியாவின் ராஜாவான கோரேசு ஏன் இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தி இஸ்ரவேலர்களை விடுவித்தார்?
அவர் இஸ்ரவேலர்களை விடுவிப்பதற்கு சுமார் 170 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஏசாயா புத்தகத்தில் தன் பெயர் எழுதப்பட்டிருப்பதை கோரேசு ராஜா பார்த்தார் .
“கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி. . . உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்” ஏசா 45:1-4
பாபிலோனைக் கைப்பற்ற தேவனே தனக்கு உதவினார் என்பதை கோரேசு ராஜா உணர்ந்து, வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே இஸ்ரவேலர்களை விடுவித்தார்.
இதன் விளைவாக, அடிமைகளை விடுவித்து மத சுதந்திரத்திற்கான உரிமையை அங்கீகரித்த ஒரு பண்டைய மன்னராக கோரேசு ராஜா இன்னமும் ஜனங்களால் போற்றப்படுகிறார்.
இயேசு இப்பூமிக்கு வருவதற்கு சுமார் 700 வருடங்களுக்கு முன்பே வேதாகமத்தில் அவர் குமாரனாக பிறப்பதையும் முன்னறிவித்தது.
". . . இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.” ஏசா 7:14
இந்த தீர்க்கதரிசனத்தின்படி, தேவன் கன்னி மரியாளின் சரீரத்தின் மூலம் இயேசுவாக பிறந்தார் (மத் 1:18-23). மேலும், இயேசு எவ்வாறு துன்பப்படுவார் என்பதையும் வேதாகமம் விரிவாக முன்னறிவித்தது.
". . . அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், . . நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” ஏசா 53:3-5
இந்த தீர்க்கதரிசனத்தின்படி, இயேசு ஈட்டியால் குத்தப்பட்டு வாரினால் அடிக்கப்பட்டார் (மத் 27:26-35; யோ 19:34). வேதாகமத்தில் தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டபோது ஜனங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும், அவை அனைத்தும் நிறைவேறியுள்ளன.
எனவே தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள் என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது (1 தெச 5:20). ஏனென்றால், வேதாகம தீர்க்கதரிசனங்களை நாம் புறக்கணித்தால் நம்மால் இரட்சிக்கப்பட முடியாது. அநேக தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டபடியே நிறைவேறிவிட்டதால், மீதமிருக்கும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் தவறாமல் நிறைவேறும்.
“பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். ” லூக் 21:11
கடைசி மாபெரும் வாதைகளும் மற்றும் அழிவுகளும் வரும்போது இரட்சிக்கப்படுவதற்கு நாம் சீயோனுக்கு ஓட வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது.
“ ‘ “. . . சேருங்கள் . . .” ‘சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன். ’” எரே 4:5–6
தேவனுடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயோன்தான், தேவன் நமக்கு வாக்களித்த அடைக்கலமும் மற்றும் இரட்சிப்பிற்கான ஸ்தலமுமாகும் (ஏசா 33:20).
வேதாகம போதனைகளின்படி தேவனுடைய பண்டிகைகளை ஆசரிக்கும் உலகின் ஒரே சபை; அது சீயோன் எனப்படும் தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கமாகும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை