இயேசு நமக்கு அருளின உவமையின் வாயிலாக, ஆபிரகாம் தந்தையாகிய தேவனைக் குறிக்கிறார் என்பதையும் ஆபிரகாம் குடும்பத்தின் வாரீசை நிர்ணயிக்கும் முக்கிய கதாபாத்திரமான சாராள் சுயாதீனமுள்ள நமது தாயாக புது உடன்படிக்கையாக குறிப்பிடப்பட்டிருக்கிறார் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தேவனை விசுவாசிக்காத அனைவருமே பெற்றோர்கள் அடிமைகளாக இருந்த எலியேசரைப் போன்றவர்கள் மேலும் தந்தையாகிய தேவனை மட்டுமே விசுவாசிப்பவர்கள் இஸ்மவேலைப் போன்றவர்கள் அப்படிப்பட்டவர்களால் தேவனுடைய வாரீசுகளாக முடியாது.
ஈசாக்கைப் போல தந்தையாகிய தேவன் (கிறிஸ்து அன்சாங்ஹோங்) மற்றும் சுயாதீனமுள்ள தாயாகிய தேவனை ஏற்றுக்கொண்டு தேவனுடைய மாம்ச இரத்தத்தின் வாயிலாக தேவனுடைய பிள்ளைகளாக முத்திரிக்கப்பட்டவர்களே
பரலோக ராஜ்யத்தின் வாரீசுகளாக முடியும்.
“… ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி…”
லூக்கா 16:22-24
அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்,… இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.
கலாத்தியர் 4:23-31
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை