கிட்டத்தட்ட 3,500 வருடங்களுக்கு முன்பு, இஸ்ரவேலர்கள் பஸ்காவை ஆசரித்து, அதன் மறுநாளிலிருந்து எகிப்திய சேனைகளால் துரத்தப்பட்டு, பாடுகளை அனுபவித்தது, ஒரு நிழலாகும். கிட்டத்தட்ட 2,000 வருடங்களுக்கும் முன்பு, இயேசு கிறிஸ்து தமது சீஷர்களோடுகூட பஸ்காவை ஆசரித்து, அதற்கு மறுநாளில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் நிஜமாக சிலுவையின்மீது பாடுபட்டார்.
பழைய ஏற்பாட்டின் காலத்தில், புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் பாடுகளை நினைவுகூரும்படியாக, தேவன் இஸ்ரவேலர்களை புளிப்பில்லா அப்பத்தையும் கசப்பான கீரையையும் புசிக்கச் செய்தார். புதிய ஏற்பாட்டின் காலத்தில், இயேசுவின் தியாகத்தை உணர்ந்துகொண்ட தேவனுடைய சபையின் பரிசுத்தவான்கள் சிலுவைப் பாடுகளில் பங்குபெறும்படியாக, தேவன் அவர்களை உபவாசம் பண்ணச் செய்தார்.
அப்போஸ்தலர் பவுல் தன் இருதயத்தில் இயேசுவின் அச்சடையாளங்களைக் கொண்டிருந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததுபோலவே, நாமும் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள் மற்றும் பரலோகத் தாய் அவர்களின் அன்பினை நமது இருதயங்களில் பதித்துக்கொண்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக்கூடிய தேவனுடைய பிள்ளைகளாக வேண்டும்.
இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக;
கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே
தரித்துக் கொண்டிருக்கிறேன். கலாத்தியர் 6:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை