பழைய ஏற்பாட்டின் பலிகள் பாவிகளின் மனந்திரும்புதலையும்
தேவனுடைய நிவிர்த்தியையும் உள்ளடக்கியிருக்கிறது.
ஆதாமும் ஏவாளும் முதல் பாவம் செய்தபின்பு,
அவர்கள் ஜீவ விருட்சத்தின் அருகில் மீண்டும் செல்வதற்காக,
தேவன் அவர்களை பலிசெலுத்த அனுமதித்தார்.
மோசேயின் காலமும் கடந்து பலிகள் தொடர்ந்தன,
பின்பு புதிய ஏற்பாட்டின் காலத்தில்
ஆராதனை சேவைகளாக மாற்றமடைந்தன.
நாம் தேவனுக்கு ஏறெடுக்கிற ஆராதனை சேவைகள் இல்லாமல்,
நமக்கு ஒருபோதும் பாவமன்னிப்பு வழங்கப்பட முடியாது.
பழைய ஏற்பாட்டின் ஆராதனை சேவைகள் அனைத்திலும்
பாவிகளுக்காக மிருகங்களின் இரத்தம் சிந்தப்பட்டது.
இருந்தாலும், புதிய ஏற்பாட்டின் காலத்தில்,
இயேசுகிறிஸ்து தாமே பாவநிவாரண காணிக்கையாக
பலிசெலுத்தப்பட்டார். எனவே, இயேசு தன்
பலியின் வாயிலாக ஸ்தாபித்த ஆராதனை சேவைகள்
அனைத்தையும் நாம் கண்டிப்பாக ஆவியோடும்
உண்மையோடும் ஆசரிக்க வேண்டும்.
இயேசு பிரதான ஆசாரியரானார் என்னும் உண்மையின் அர்த்தம்
நாம் ஆராதனை சேவைகளைத் தொடர வேண்டும் என்பதாகும்.
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் ஓய்வுநாள்,
பஸ்கா போன்ற எல்லா ஆராதனை சேவைகளையும்
ஆசரித்து, தேவன் நமக்கு வாக்களித்த பாவமன்னிப்பு
மற்றும் பரலோக நம்பிக்கையை நோக்கிச் செல்கிறார்கள்.
… தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை
அடைவதற்குக் காரணராகி,
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான
பிரதான ஆசாரியர் என்று தேவனாலே
நாமம் தரிக்கப்பட்டார். எபிரெயர் 5:9-10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை