கிறிஸ்துவின் பாதையை சரியாகப் பின்பற்ற, நாம் நம் சொந்த சிலுவையை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவனாகிய இயேசு, மனுகுலத்தின் இரட்சிப்புக்காக சிலுவையின் பாரத்தை சுமந்தார், மேலும், மோசே மற்றும் அப்போஸ்தலர் பவுல் போன்ற விசுவாசத்தின் முன்னோர்கள் தங்கள் பாடுகளின் சிலுவையை சந்தோஷத்தோடு எடுத்துக்கொண்டார்கள். அதுபோலவே, நாமும்கூட நம்முடைய சொந்த சிலுவையைச் சுமந்துகொண்டு, இரட்சிப்புக்காக துன்பப் பாதையில் நடக்க வேண்டும்.
கிறிஸ்துவின் சிலுவையின் வழியைப் பின்பற்றி, அனைத்து பாடுகளையும், அப்போஸ்தலர் பவுல் ஆசீர்வாதமாகக் கருதியதுபோலவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் சந்தோஷமாக தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, தேவனுக்கு நன்றி செலுத்துவதை ஒருபோதும் மறவாமல், உறுதியான விசுவாசத்தோடு தேவனுடைய பாதையைப் பின்பற்றுகிறார்கள்.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. மத்தேயு 5:10–12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை