நம்முடைய விசுவாச வாழ்க்கையில் சிலுவையை சுமக்கிறது போன்ற பாரத்தையும் சோதனைகளையும், துன்பங்களையும் சந்திக்கும்போது, அதை கடினமான சூழ்நிலைகளாக கருதி, "நான் துரதிஷ்டமானவன்" என்று சிந்திப்பவர்கள் உண்மையாகவே சோகமாக இருப்பார்கள், ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும்கூட நன்றி செலுத்தி, ஆசீர்வாதத்தை உணர்ந்து கொள்கிறவர்கள் சந்தோசத்தை கண்டுபிடித்து, பரலோக ராஜ்யம் பிரவேசிப்பார்கள்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் பரலோகத் தாயும், "எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்", எல்லாவற்றிலும் நன்றி செலுத்துங்கள்" என்று நம்மிடம் சொல்கிறார்கள் மேலும் நம்மை மனநிறைவான வாழ்க்கையை வாழவேண்டும் என்று கற்பிக்கிறார்கள். உலக ஆசையானது சோதனையும், மகிழ்ச்சியின்மையும்தான் உருவாக்குகிறது. தேவன், எப்பொழுதும் நம்மை நாமே தேவ பக்தியாக இருப்பதற்கு முயற்சி செய்யவும், துரதிஷ்டவசமான சூழ்நிலைகளை சந்தோஷமாக மாற்ற பயிற்சி செய்யவேண்டும் என்று நமக்கு கற்பிக்கிறார்கள்.
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்; எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5:16-18
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்… அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1:12-15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை