பாவ மன்னிப்பைப் பெற வேண்டுமானால், பாவங்களை வேறொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவன் இதை ஒரு நிழலாக பழைய ஏற்பாட்டில் ஓய்வுநாளிலும், அன்றாட தகன பலியாகவும், பஸ்கா மற்றும் மற்ற பண்டிகையிலும் பலியான மிருகங்களின் வாயிலாக முன்னதாகவே காண்பித்திருந்தார். மேலும் பழைய ஏற்பாட்டின் பாவநிவிர்த்தி செய்யும்நாளின் சட்டத்தின் வாயிலாக, எல்லா பாவங்களும் வனாந்தரத்துக்கு அனுப்பப்பட்டு சாகடிக்கப்படுகிற போக்காட்டின்மீது செலுத்தப்படும் என்பதைக் காண்பித்தார்.
தேவன் சிலுவையில் பாடுகளையும், ஏளனங்களையும், தனது படைப்புகளினாலே அவமானங்களையும் சகித்துக்கொண்டதற்கான காரணம், சகல ஜனங்களுடைய பாவங்களுக்காக அவர் விலைகிரயமாகி அதன்வாயிலாக அவர்களை இரட்சிக்க வேண்டும் என்ற அவருடைய மாபெரும் அன்பு என்பதை தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் உணர்ந்துகொள்கிறார்கள்.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்.
1 யோவான் 1:9-10
“அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்.”
மத்தேயு 20:28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை