பழைய ஏற்பாட்டின் மோசேயின் காலத்தில்
ஆசரிக்கப்பட்ட முதற்பலன் பண்டிகை
ஒரு நிழலாக இருந்தது மற்றும் புதிய ஏற்பாட்டின்
உயிர்த்தெழுந்த நாள் நிஜமாக இருக்கிறது.
முதற்பலன்பண்டிகையின் தீர்க்கதரிசனத்தை
நிறைவேற்ற இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கு
மறுநாளான ஞாயிற்றுக்கிழமையின் விடியற்காலத்தில்
மரித்தோரிலிருந்து முதற்பலனாக உயிர்த்தெழுந்தார்.
எனவே, நாம் ஓய்வுநாளை (சனிக்கிழமை)
வாராந்திர பண்டிகையாகவும், உயிர்தெழுந்த நாளை
வருடாந்திர பண்டிகையாகவும் ஆசரிப்பதே
தேவனுடைய சித்தமாகும்.
சாத்தான் மனுகுலத்தை மரண சங்கிலியின்
கீழ்க்கொண்டுபோய், அவர்களை மரண
வேதனைக்குள் செல்ல வழிவகுக்கிறான்.
ஆனாலும் இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்து,
மரணத்தின் வல்லமையை உடைத்து,
உயிர்த்தெழுந்த நாளின் வாயிலாக ஜனங்களை
நித்தியஜீவனுக்கு வழிநடத்துகிற
சத்தியத்திற்குள் நடத்தினார்.
இந்நாட்களில், தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
பிறமதங்களின் பாரம்பரியமான முட்டைகளைப்
பகிர்ந்து கொள்ளுவதைப் பின்பற்றாமல்
இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி
நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கும்
அப்பம் பிட்குதலைப் பின்பற்றுகிறார்கள்.
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து,
நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்....
கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15:20-22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை