பழைய ஏற்பாட்டில் முதற்பலன் பண்டிகையானது புதிய ஏற்பாட்டில் உயிர்த்தெழுந்த நாளாகும். இது ஞாயிற்றுக்கிழமையில் நிறைவேற வேண்டியதாயிருந்த ஒரு தீர்க்கதரிசனமாகும்.
இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வெளியேறி சிவந்த சமுத்திரத்தைக் கடந்து கரையேறின நாள் வாரத்தின் முதலாம் நாளாகும். இந்த நாளை தேவன் முதற்பலன் பண்டிகையாக நியமித்து, இதனை இஸ்ரவேலர்கள் ஒவ்வொரு வருடமும் ஓய்வுநாளுக்கு மறுநாளில் (ஞாயிற்றுக்கிழமையில்) ஆசரிக்கும்படி செய்தார். முதற்பலன் பண்டிகையின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும்படியாக, இயேசு வாரத்தின் முதலாம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று உயிர்த்தெழுந்தார்.
முதற்பலனாகிய கதிர்க்கட்டு தேவனுக்கு முன்பாக அசைவாட்டப்பட்ட நாளான முதற்பலன் பண்டிகையின் தீர்க்கதரிசனத்தின்படியே, இயேசு நித்திரை அடைந்தவர்களில் முதற்பலனாக உயிர்த்தெழுந்து, சகல மனுக்குலத்திற்கும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைக் கொடுத்தார். இதனை விசுவாசித்து, தேவனுடைய சபை ஒவ்வொரு வருடமும் உயிர்த்தெழுந்த நாளை ஆசரிக்கிறது.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
“. . . அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும்.”
லேவியராகமம் 23:9-11
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,
உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல் . . .
அவர்களை நோக்கி: “உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.”
லூக்கா 24:1-6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை