தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளாமல் தேவ இரகசியமான கிறிஸ்துவை நம்மால் அறியமுடியாது. ஏனென்றால், தேவனுடைய கற்பனைகளான ஓய்வுநாள், பஸ்கா புதிய உடன்படிக்கை கைக்கொள்கிறவர்களுக்கு மட்டும் தேவன் புத்தியைக் கொடுத்துள்ளதால், மாம்சத்தில் வந்த தேவனை அடையாளம் காண முடிகிறது.
மனுஷனுடைய கற்பனைகளை கைக்கொள்கிறவர்கள் ஓய்வுநாள், பஸ்காவை முக்கியமற்றதாய் கருதுகிறார்கள் ஆனால், தேவனிடமிருந்து புத்தியைப் பெற்றவர்கள் தேவனுடைய கற்பனைகள் ஒவ்வொன்றிலும் உண்மையான அர்த்தம் அடங்கியிருப்பதை உணர்ந்து, “இவர் நம்முடைய தேவன்” என்று ஆர்ப்பரிப்பார்கள். மரணத்தை ஜெயமாக
விழுங்கும்படி, 1,600 வருடங்களாக ஆசரிக்கப்படாமலிருந்த பஸ்காவை மீண்டும் ஸ்தாபித்த கிறிஸ்து அன்சாங்ஹோங்கும் தாயாகிய தேவனுமே மனுகுலம் நீண்ட காலம் காத்திருந்த மெய்யான தேவர்கள் ஆவர்.
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
சங்கீதம் 111:10
சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும் . . . அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார். . . அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்.
ஏசாயா 25:6-9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை