வெறும் சபைக்கு சென்றாலே தேவனுடைய
ஜனங்களாக முடியும் என்று அநேக
ஜனங்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், தேவனுடைய ஜீவனின் சட்டத்தின் வாயிலாக,
அவர் மெய்யான ஜனங்களையும் பொய்யான
ஜனங்களையும் வேறுபடுத்துகிறார்.
பரலோகத்தில் குடியுரிமை பெற்ற தேவனுடைய
மெய்யான ஜனங்கள், சிருஷ்டிகரின் வல்லமையை
நினைவுகூரும் ஓய்வுநாளையும், மீட்பரின் வல்லமையை
நினைவுகூரும் பஸ்காவையும் கைக்கொள்ள வேண்டும்.
ஞானத்தின் ராஜாவான சாலொமோன்,
தேனீக்களையும் பட்டாம்பூச்சிகளையும் கொண்டு
நிஜமான பூவை செயற்கைப் பூவிலிருந்து வேறுபடுத்திக்
காட்டுவது போலவே, ஓய்வுநாள் மற்றும் பஸ்கா போன்ற
கட்டளைகளின் மூலம் தேவன் தம்முடைய மெய்யான
ஜனங்களை வேறுபடுத்துகிறார்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய
போதனைகளினால் மீட்கப்பட்ட தேவனுடைய அடையாளமாக
இருக்கும் தேவனுடைய கட்டளைகளை, இன்று, உலகெங்கிலும்
உள்ள எண்ணற்ற உறுப்பினர்கள் கைக்கொள்கிறார்கள்.
ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்;
அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று
உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன்,
இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய
தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை
அவர்களுடைய இலச்சையே, அவர்கள்
பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. . . .
பிலிப்பியர் 3:18-20
"ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக;
அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப்
பரிசுத்தக்குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்;
அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன்
ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.”
யாத்திராகமம் 31:14
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை