கவனக்குறைவான வார்த்தைகளைப் பேசியதால் ஏசாவும் யூதாஸ்காரியோத்தும் ஆசீர்வாதங்களை இழந்தனர். வலது பக்க கள்ளனும் தானியேலின் மூன்று நண்பர்களும் விசுவாச வார்த்தைகளைப் பேசியதால் தேவனிடமிருந்து நிரம்பி வழிந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இது போல, நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒருபோதும் மறைந்துவிடாது, ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் நம்மிடமே திரும்பும். எனவே, நாம் பேசுவதற்கு முன்பு பலமுறை சிந்திக்கவும், கோபப்படுவதற்கு தாமதமாக இருக்க வேண்டும் என்று தேவன் எப்போதும் கற்றுக்கொடுக்கிறார்.
நாம் பாவம் செய்ததால் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டோம் என்பதை உணர்ந்தால், நாம் எதிலும் ஏமாற்றமடைய மாட்டோம். மாறாக, பரிசுத்த ஆவியின் காலத்தில் வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடன் நாம் இருக்க முடிகிற உண்மையை எண்ணி நன்றியுடன் இருப்பதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழலாம். தேவனுடைய போதனைகளைப் பின்பற்றி நாம் எப்போதும் நல்ல வார்த்தைகளை பேச முடியும்.
ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள். மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே… அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்… அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
யாக்கோபு 1:19-25
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை