மூன்றாம் வானத்தின் மகிமையைக் கண்டதாலேயே அப்போஸ்தலர் பவுல் ஒரு பெரிய தீர்க்கதரிசியாக முடிந்தது. மனிதகுலம் அளவிட முடியாத பரந்த பிரபஞ்சத்திற்குள், தேவன் நமக்காக ஒரு மகிமையான எதிர்காலத்தை ஆயத்தம் செய்திருக்கிறார். இதனால்தான், பூமியை அல்ல, பிரபஞ்சத்தை அதாவது பரலோக ராஜ்யத்தைப் பார்க்கும்படி, பரந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க அவர் நம்மை அழைத்திருக்கிறார்.
பரலோக ராஜ்யத்தின் மகிமையையும், அங்கே நமக்காகக் காத்திருக்கும் பிரகாசமான எதிர்காலத்தையும் நினைத்து, இன்றைய கஷ்டங்களை நாம் ஜெயங்கொள்ள வேண்டும். நாம் பரலோக ராஜ்யத்தை விசுவாசிக்கத் தவறினால், இறுதியில் தற்காலிக துன்பங்களுக்கு மத்தியில் நம் விசுவாசத்தை இழந்து சத்தியத்தை விட்டு விலகிவிடுவோம். இருப்பினும், நாம் பரலோக ராஜ்யத்தை உணர்ந்துகொண்டால், நாளுக்கு நாள் வளரும் விசுவாசத்தோடு அதன் மகிமையில் பங்குபெறுவோம்.
மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் 8:6
அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். ரோமர் 8:24–25
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை