வேதாகம வார்த்தை என்பது கற்பனையானது அல்ல; இது மனிதகுலத்தின் எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் தேவனிடமிருந்து வந்த ஜீவ வார்த்தையாகும். பாபிலோன் ராஜ்யத்திற்குப் பிறகு ராஜ்யங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பற்றி தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் வாயிலாகவும், 3,500 வருடங்களுக்கு முன்பு யோபுவுக்கு வெளிப்படுத்தப்பட்ட நீர் சுழற்சி மற்றும் பூமி விண்வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பது போன்ற அறிவியல் உண்மைகள் வாயிலாகவும், வேதாகமம் நிச்சயமாக தேவனுடைய வார்த்தை என்பதை நாம் அறிய முடியும்.
அப்போஸ்தலர் யோவான், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்ட இரட்சிக்கப்பட இருக்கும் பரிசுத்தவான்களைக் கண்டார். இன்று, அப்போஸ்தலர் யோவான் முன்னறிவித்தபடி ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டிருக்கும் தேவனுடைய சபையின் உறுப்பினர்கள், பரலோக ராஜ்யத்தில் தாங்கள் அனுபவிக்கப்போகும் நித்திய மகிமையினால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறார்கள்.
ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான். தானியேல் 7:18
அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். வெளிப்படுத்தல் 22:5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை