விக்கிரக ஆராதனையில் விழுந்துபோன இஸ்ரவேலர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு இரண்டாம் தரம் பத்து கட்டளைகளை வழங்கிய பாவநிவிர்த்தி செய்யும் நாளை நாம் நினைவுகூரும்படியாக, தேவன் பரிசுத்த நாட்காட்டியின் ஏழாம் மாதத்தின் முதல் நாளை எக்காளப் பண்டிகையாக நியமித்தார். மேலும், மனந்திரும்புதலுக்கு அழைக்க எக்காளப் பண்டிகையின்போது எக்காளங்கள் ஊதப்பட்டதுபோலவே, இயேசுவும் இப்பூமிக்கு வந்து, “மனந்திரும்புங்கள்” என்று சொல்லி மனுகுலத்தை மனந்திரும்புமாறு வலியுறுத்தினார்.
ஊதாரி மகனின் உவமையிலும், நினிவேயில் 1,20,000 ஜனங்களை இரட்சிப்பிற்கு வழிநடத்திய யோனாவின் வரலாற்றிலும் நாம் காண்பதுபோல, மனந்திரும்புதலின் கிரியைக்குப் பின்பு தேவனிடமிருந்து மாபெரும் ஆசீர்வாதங்கள் எப்போதும் ஆயத்தமாயிருக்கின்றன. இன்றும்கூட, நாம் உலகை நோக்கித் திரும்பிய கண்களுக்கும் இருதயங்களுக்கும் யோனாவைப் போல முழுமையான மனந்திரும்புதலை அடைந்து, முழு உலகையும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனிடம் திரும்பும்படி அழைக்க எக்காளத்தை ஊத வேண்டும்.
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.
ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை