தேவ வாக்குத்தத்தத்தை மீறி, பரிசுத்தம் மற்றும் தேவபக்தியை விட்டு விலகினால், நாம் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவோம். நோவா, சோதோம் கொமோராவின் காலங்களிலும், இந்த கடைசி காலத்திலும், தேவனின் உலக நியாயத்தீர்ப்புக்குப் பின்னால் ஒரு பொதுவான அம்சம் உள்ளது அது ஜனங்கள் தேவனைவிட்டு விலகி, கலகக்காரரும், பொல்லாதவரும், விபசாரக்காரருமாய் மாறினர் என்பதே ஆகும்.
இன்று நோவாவைப் போல, இன்னும் காணாதவற்றில் உறுதியான விசுவாசம் நமக்கு வேண்டும். பொல்லாத உலகை அக்கினியால் நியாயந்தீர்ப்பார் என்ற வேதாகம தீர்க்கதரிசனத்தை விசுவாசித்து, தேவனுடைய சபை, பேரழிவிலிருந்து உலகை இரட்சிக்கும் தேவனுடைய வாக்குத்தத்தம் அடங்கிய புதிய உடன்படிக்கை பஸ்காவைப் பிரசங்கிக்கிறது.
அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. 2 பேதுரு 3:6–7
. . . அது கர்த்தருடைய பஸ்கா. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும். யாத்திராகமம் 12:11–13
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை