கிதியோன், இஸ்ரவேலருக்குள் பெலவீனமான கோத்திரத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். இருந்தாலும் அவனால் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதின் வாயிலாக வெறும் 300 வீரர்களைக் கொண்டு 1,35,000 மீதியானியர்களை முறியடிக்க முடிந்தது. மோசேயும் யோசுவாவும்கூட தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதின் வாயிலாக அமலேக்கியருக்கு விரோதமான யுத்தத்தில் ஜெயம்கொண்டார்கள். அப்படியே, இன்றும்கூட, தேவனுடைய உதவியை விசுவாசிப்பது மற்றும் அவருக்குக் கீழ்ப்படிவதிலிருந்தே எல்லா சூழ்நிலைகளிலும் ஜெயம் கிடைக்கிறது.
“சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான்” என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தபடியே, இப்பூமியில் எல்லாமே தேவனுடைய வார்த்தையின்படி நடக்கிறது என்பதை உணர்ந்து, தேவனுடைய வார்த்தைகள் அற்பமாய் தெரிந்தாலும்கூட அவற்றிற்குக் கீழ்ப்படிகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
நியாயாதிபதிகள் 6:15-16
உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள். சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
ஏசாயா 60:21-22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை