ரெகொபெயாம், சவுல், உசியா, ஆகாஸ், சிதேக்கியா போன்ற ராஜாக்களுடைய ராஜ்யம் பலம் பெற்றபோது, அவர்கள் தங்களை உயர்த்திக் கொண்டு அகங்காரம் அடைந்தனர்.
இறுதியில், அவர்கள் தேவனுக்கு எதிராக பாவம் செய்து அழிக்கப்பட்டனர்.
மறுபுறம், யோதாம், தாவீது, தானியேல் மற்றும் அவரது மூன்று நண்பர்களும் எப்போதும் தேவனுக்கு விசுவாசமுள்ளவர்களாகவும், தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.
இன்று தேவனுடைய சபை உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய விசுவாசத்தின் திசையைக் காட்டும் ஒரு முக்கியமான பாடம் இது.
சூழ்நிலைகள் மற்றும் சுற்றுசூழலைப் பொறுத்து தடுமாறுகிற விசுவாசத்தோடு அல்லாமல், அவர்கள் எப்போதும் தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்,.
மேலும், அவர்கள் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய உதவியை விசுவாசிக்க வேண்டும், மேலும் தேவனுடைய வார்த்தையின்படி சுவிசேஷப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான், தாவீதின் ராஜ்யத்தைப் போலவே, தேவன் சீயோனை வல்லமையுள்ளதாகவும், செழுமையாகவும், உலகம் முழுவதும் சிறந்ததாகவும் மாற்றுவார்.
“அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன்
துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக்
கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.
அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய
தாவீது வசமாகக் திருப்பினார்.”
1 நாளாகமம் 10:13-14
“யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக
நேராக்கினதினால் பலப்பட்டான்.”
2 நாளாகமம் 27:6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை