யூதாஸ்காரியோத்து இயேசுவின் சீஷனாக இருந்தபோதிலும், அவன் இருதயம் பரலோக ராஜ்யத்தின் மீது அல்ல, பொருள் செல்வத்தின் மீதே இருந்தது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணப்பையிலிருந்து அவன் எடுத்துக்கொண்டான், இயேசுவின்மீது விலையுயர்ந்த பரிமளத் தைலத்தைப் பயன்படுத்திய மரியாளைக் கடிந்துகொண்டான். தாவீது மற்றும் அகித்தோப்பேலின் வரலாறு ஒரு தீர்க்கதரிசன நிழலாக இருந்ததுபோலவே, யூதாஸ் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுக்கு விற்று, இறுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வான் என்ற தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றினான்.
யூதாஸ்காரியோத்து தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணப்பையினால் சோதிக்கப்பட்டதுபோல, நாமும், நமது அருகாமையிலிருந்து அடிக்கடி எழும்புகிற சாத்தானின் சோதனைகளுக்கு எதிராக விழித்திருக்க வேண்டும். கிருபையான வார்த்தைகளாலும் செயல்களாலும் நம் விசுவாச வாழ்க்கையை வாழ வேண்டும். கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் வழிநடத்தும் பரலோக ராஜ்யத்திற்கான பாதையை உண்மையுடன் பின்பற்றுபவர்கள், பரலோக ராஜ்யத்தில் தேவனை மகிமைப்படுத்தி, நித்திய மகிமையை அனுபவிப்பார்கள்.
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை . . . பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6:7–10
அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி; மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். மாற்கு 14:20–21
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை