தேவனை விசுவாசிப்பவர்கள் தேவனுடைய போதனைகளின்படி கூடாரப் பண்டிகையை கட்டாயம் ஆசரிக்க வேண்டும். ஏனென்றால், கூடாரப் பண்டிகையை ஆசரிப்பவர்களுக்குப் பரிசுத்த ஆவியை அருளுவதாகவும், ஆசரிக்காதவர்களுக்குத் தண்டனை வருவதாகவும் சகரியா தீர்க்கதரிசியின் வாயிலாக தேவன் சொன்னார்.
அவரது முதல் வருகையில் இயேசு பரிசுத்த ஆவியை அருளினார்; அவருடைய இரண்டாம் வருகையில், கூடாரப் பண்டிகையின்போது ஆவியும் மணவாட்டியும் பரிசுத்த ஆவியை அருளுகிறார்கள். “ஆவியும் மணவாட்டியும் ஜீவத்தண்ணீரைக் கொடுக்கிறார்கள்,” “ஜீவத்தண்ணீர் எருசலேமிலிருந்து புறப்படும்,” “தேவனுடைய சிங்காசனத்திலிருந்து ஜீவத்தண்ணீரின் நதி புறப்படுகிறது” என்ற வேதாகம தீர்க்கதரிசனங்கள் அனைத்தும், பரலோக எருசலேம் தாய் மனிதகுலத்திற்குப் பரிசுத்த ஆவியையும் ஜீவனுக்கு வழிநடத்தும் போதனைகளையும் அருளுவார் என்பதை முன்னறிவிக்கின்றன.
யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது . . . பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு . . . வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார் . . . யோவான் 7:2–39
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளிப்படுத்தல் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை