பரலோகத்தில் மகிமைமிக்க பதவியில் இருந்த தூதனான லூசிபர் மற்றும் தீரு ராஜா, தங்களது அகங்காரத்தின் காரணமாக தேவனுக்கும் மேலாக தங்களை உயர்த்தினது போல, எல்லா மனித குலமும் பரலோகத்தில் பாவங்களைச் செய்து இப்பூமிக்கு தள்ளிவிடப்பட்டு, முன்னதாகவே மரண தண்டனைக்காக விதிக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும்,
தேவன் தாமே நம்முடைய பாவங்களுக்காக பாவநிவாரண பலியாக, ஒவ்வொரு ஆராதனை சேவையிலும் பலியாகி, நமக்கு பாவமன்னிப்பை க்கொடுக்கிறார்.
சுமார் 1,500 ஆண்டுகளாக மோசேயின் காலத்திலிருந்து இயேசுவின் காலம் வரை, ஒவ்வொரு பண்டிகைகள் மற்றும் ஓய்வுநாட்களில், ஆண் மற்றும் பெண் மிருகங்களின் பலியின் இரத்தத்தின் வாயிலாக, நாம் பாவமன்னிப்பைப் பெறும்படி தேவன் நம்மை அனுமதித்தார். பழைய உடன்படிக்கையின் வாயிலாக, புது உடன்படிக்கையின் நிஜமாய் இருக்கிற தாயாகிய தேவனின் அன்பையும், தியாகத்தையும் அறிந்து கொள்ளும்படி தேவன் நம்மை அனுமதித்து, மனித குலத்தின் மீது தாம் வைத்த அன்பிற்கு ஒரு சான்றாக, சிலுவையில் தமது இரத்தத்தை சிந்திய கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களின் தியாகத்தையும் தேவன் நமக்குக் காண்பிக்கிறார்.
"சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக்கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்."
எண்ணாகமம் 19:9
"ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒருவயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.
எண்ணாகமம் 15:27
கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
ஏசாயா 50:1
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை