வேதாகம தீர்க்கதரிசனத்தின்படி, இந்த காலமானது
நெருக்கடியின் காலம் என்று விவரிக்கப்பட்டுள்ளது
நாடுகளுக்கிடையே போர் எழும்பும்போது,
எண்ணற்ற காலநிலை அழிவுகள் வெளிவரும்போதும்,
ஜனங்கள் விண்வெளிக்கோ, கடலின் ஆழத்திற்கோ
அல்லது நிலத்தடிக்கோ தப்பிச் செல்ல
திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.
இருந்தாலும், தாயாகிய தேவன் வாசம்பண்ணுகிற
சீயோனைத் தவிர இரட்சிப்பின் அடைக்கலம்
இல்லை என்று வேதாகமம் சொல்கிறது.
ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தை,
தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்தி விளக்கியதுபோலவே,
இன்று பேரழிவுகளுக்கு மத்தியில், பாதுகாப்பின்
அடைக்கலமான தாயாகிய தேவனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆபத்துக் காலத்தில், பிள்ளைகள் தங்கள்
தாயின் அரவணைப்பில் பாதுகாப்பாக
உணர்வது போல, பேரழிவுகளில், மனுகுலத்திற்கு
மிகவும் பாதுகாப்பான இடம் என்பது தாயாகிய தேவன்
என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும்
வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மனுஷரையும் மிருகஜீவன்களையும்
வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப்
பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும்,
இடறுகிறதற்கேதுவானவைகளையும்
துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு,
தேசத்தில் உண்டான மனுஷரைச்
சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
செப்பனியா 1:2-3
அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து:
என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று
தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி,
வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,
அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும்,
அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
அவனைக் கடினமாய்த் தண்டித்து,
மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்;
அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
மத்தேயு 24:48-51
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை