நீண்ட காலமாக பேழையைக் கட்டும்போதும் நோவா தனிமையில் இருந்தபோதும் தேவனுடைய ஆசீர்வாதத்தை விசுவாசித்தார். எகிப்தில் இளவரசனாக தன் மகிமையை அனுபவிப்பதைக் காட்டிலும், மோசே, தேவனுடைய ஜனங்களோடுகூட பாடுபடுவதையே தேர்ந்தெடுத்தார். அப்போஸ்தலர் பவுல், அநேக உபத்திரவங்களைச் சந்தித்தபோதும்கூட, ஜனங்களுக்கு பரலோக ராஜ்யத்தை வழங்கும் வாய்ப்பில் களிகூர்ந்தார். அதுபோலவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் தங்கள் சிலுவையைச் சுமந்து, சந்தோஷமாக விசுவாசப் பாதையில் நடக்கிறார்கள்.
“பரலோக ராஜ்யத்தின்மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா?” என்று பரலோகத் தாய் எப்போதும் நமக்கு நினைப்பூட்டுகிறார். எனவே, பரிசுத்தவான்களாக இருந்தாலும் சரி, முன்னணியில் பணிபுரியும் போதக ஊழியர்களாக இருந்தாலும் சரி, நம் சொந்த சிலுவையை சுமந்தபடி, தடைகளைத் தாண்டி ஆயத்தம் செய்யப்பட்டுள்ள பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை ஒவ்வொருவரும் பார்த்திட வேண்டும்.
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். எபிரெயர் 11:26
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். . . . கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். ரோமர் 8:13–18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை