பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு, வேதாகமத்தில் தன்னைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கண்டறிந்து, அதனால் பெரிதும் உந்தப்பட்டு, இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, எருசலேமில் ஆலயத்தைக் கட்டியது போலவே, நாமும் வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை விசுவாசிக்க வேண்டும். கோரேசைப் போலவே அதே ஆழ்ந்த மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டு, தேவன் நமக்குக் கட்டளையிட்ட சுவிசேஷத்தை நம் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் பிரசங்கிக்க வேண்டும்.
பத்து ராத்தல் உவமையின் மூலம் இயேசு போதித்தபடி, தேவனுடைய வார்த்தைக்குப் பயப்படுகிறவர்களுக்கு அவர் ஒரு மகிமையான எதிர்காலத்தை வாக்களித்திருக்கிறார்: அவர்கள் என்றென்றைக்கும் தேவனுடன் அரசாளுவார்கள். பரலோக ராஜ்யத்தில் நித்திய மகிமையை அனுபவிப்பார்கள் அது மரணமோ, துக்கமோ, அலறுதலோ, வேதனையோ இல்லாத ஓர் இடமாகும்.
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. வெளிப்படுத்தின விசேஷம் 21:1–4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை