பரலோகக் குடியுரிமையை உடையவர்கள் தமது நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படியாக, ஓய்வுநாள், பஸ்கா மற்றும் மூன்று தரங்களின் ஏழு பண்டிகைகளை விலையேறப்பெற்றவையாக மதிக்கும் இருதயத்தோடு தேவன் அவர்களை சிருஷ்டித்தார். எனவே, தங்கள் உதடுகளினால் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குப் பதிலாக சூரியக் கடவுளின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுகிற அனைவரையும், "நான் உங்களை அறியேன்" என்று சொல்லி, அவர்களுடைய பாவத்தைக் குறித்து எச்சரிக்கிறார்.
முழு உலகமும் மாறினாலும், ஒருபோதும் மாறாத ஒன்று தேவனுடைய நியாயப்பிரமாணமாகும். 2,000 வருடங்களுக்கு முன்பு இயேசு பஸ்காவை ஆசரித்தார்; பரிசுத்த ஆவியின் காலத்தில் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனும் பஸ்காவை ஆசரித்தார்கள். அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி பஸ்காவை ஆசரிப்பதே தேவனை மையமாகக் கொண்ட சரியான விசுவாசமாகும்.
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:21–23
ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான். எண்ணாகமம் 9:13
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை