மனுக்குலம் அனைத்தும் பிழைக்க வேண்டும் என்ற ஆழ்ந்த வாஞ்சையோடு, பஸ்காவின் மகத்தான வாக்குத்தத்தத்தை தேவன் ஸ்தாபித்தார். சிலுவையில் தம்முடைய மரணத்திற்கு முந்தைய இரவில், "நீங்கள் பஸ்காவை ஆசரிக்க வேண்டும்" என்று கட்டளையிட்டு, தமது இறுதி விருப்பத்தை நம்மிடம் விட்டு சென்றார்.
தேவன்தாமே நம்மை ஆசரிக்கும்படி கட்டளையிட்ட பஸ்காவை மனிதர்களின் அதிகாரத்தால் ஒருபோதும் அழிக்க முடியாது. எகிப்தில் நீண்டகால அடிமைத்தனத்தைச் சகித்திருந்த இஸ்ரவேலர்கள் பஸ்காவின் வாயிலாக விடுவிக்கப்பட்டதுபோலவே, மரணச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் மனுக்குலத்துக்கும் விடுதலைக்கான ஒரே பாதை பஸ்காவின் சத்தியம் மட்டுமே.
பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. வேளை வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். லூக்கா 22:7–15
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். யோவான் 6:53–54
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை