இஸ்ரவேலரின் யாத்திராகமத்தின்போது, எகிப்து முழுவதும் பேரழிவுகள் உண்டாயின, ஆனால் இஸ்ரவேலர்மேல் வரவில்லை. இதுவே தேவனுடைய உடன்படிக்கை உள்ள இடத்திற்கும் இல்லாத இடத்திற்குமான தெளிவான வித்தியாசம். புதிய உடன்படிக்கையின் பஸ்காவாகிய தேவனுடைய கட்டளை கைக்கொள்ளப்படும் இடமெல்லாம், அவருடைய ஜனங்கள் வருகையிலும் போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டு, பூமியின் சகல ஜாதிகளிலும் மேன்மையாய் வைக்கப்படுவார்கள் என தேவன் மாபெரும் வாக்குத்தத்தம் அளித்துள்ளார்.
ஓய்வுநாள், பஸ்கா ஆகிய புதிய உடன்படிக்கையில் உலகம் கைக்கொள்ளாததால், இப்பூமிக்கு மாபெரும் அக்கினி அழிவு வரும் என்று ஏசாயா, செப்பனியா, பேதுரு தீர்க்கதரிசிகள் சாட்சியளிக்கின்றனர். தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வதாலேயே மனிதகுலமானது, தந்தையான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும், தாயாகிய தேவனின் பிள்ளைகளாகி, எல்லா அழிவுகளிலிருந்தும் தேவனுடைய பாதுகாப்பு பெறலாம் என வேதாகமம் சாட்சியளிக்கிறது.
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். . . . நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உபாகமம் 28:1–6
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால், நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு . . . என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே. எரேமியா 16:10–11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை