தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய போதனைகளின்படி உலகிற்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் இருந்து, தங்கள் நற்கிரியைகளின் மூலம் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தி, புதிய உடன்படிக்கையின் சத்தியத்தைக் கொண்டு மனிதகுலத்தை தேவனிடத்தில் வழிநடத்தும்போது, அவருக்கு முன்பாக நிற்கும் நாளில் தேவன் பிரியமாயிருந்து, பொங்கி வழியும் ஆசீர்வாதங்களை அவர்களுக்கு வழங்குவார்.
பரிசுத்த ஆவியின் காலத்தில் நாம் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோக எருசலேம் தாயை ஏற்றுக்கொண்டிருந்தால், இனிமேல் உலகிலிருந்து கற்றுக்கொண்ட தீய பழக்கங்களை விட்டுவிட்டு, கிறிஸ்தவர்களாக புதிய மனிதனை தரித்துக்கொள்ள வேண்டும். இவ்வுலகம் அதிகமதிகமாக தேவபக்தியை இழந்து, மாறுபாடும் பொல்லாப்பும் பெருகும்போது, நோவா மற்றும் லோத்தின் நாட்களைப் போலவே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபமாயிருக்கிறது என்பதை உணர்ந்து, இன்னும் அதிகமாய் தேவபக்தியுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்.
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:1–2
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை